குறள்: 831பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டுஊதியம் போக விடல்.

What one thing merits folly's special name.Letting gain go, loss for one's own to claim

மு.வரதராசன் உரை

பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.

சாலமன் பாப்பையா உரை

அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம்.

கலைஞர் உரை

கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்

Explanation

Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain

Kural Info

குறள் எண்:831
Category:பொருட்பால்
அதிகாரம்:பேதைமை
இயல்:நட்பியல்