குறள்: 832பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மைகையல்ல தன்கட் செயல்.

'Mid follies chiefest folly is to fix your loveOn deeds which to your station unbefitting prove

மு.வரதராசன் உரை

ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை

அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும்.

கலைஞர் உரை

தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது, என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்

Explanation

The greatest folly is that which leads one to take delight in doing what is forbidden

Kural Info

குறள் எண்:832
Category:பொருட்பால்
அதிகாரம்:பேதைமை
இயல்:நட்பியல்