குறள்: 838மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்கையொன்று உடைமை பெறின்.

When folly's hand grasps wealth's increase, 'twill beAs when a mad man raves in drunken glee

மு.வரதராசன் உரை

பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை

அறிவற்றவன் தன்னிடம் ஒன்றைச் சொந்தமாகப் பெறுவது, முன்பே பிடித்துப் பிடித்தவன், கள்ளால் மயங்கியும் நிற்பது போல் ஆகும்.

கலைஞர் உரை

நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால் பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்

Explanation

A fool happening to possess something is like the intoxication of one who is (already) giddy

Kural Info

குறள் எண்:838
Category:பொருட்பால்
அதிகாரம்:பேதைமை
இயல்:நட்பியல்