குறள்: 904மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்வினையாண்மை வீறெய்த லின்று.

No glory crowns e'en manly actions wroughtBy him who dreads his wife, nor gives the other world a thought

மு.வரதராசன் உரை

மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.

சாலமன் பாப்பையா உரை

தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.

கலைஞர் உரை

மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை

Explanation

The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded

Kural Info

குறள் எண்:904
Category:பொருட்பால்
அதிகாரம்:பெண்வழிச் சேறல்
இயல்:நட்பியல்