குறள்: 907பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்பெண்ணே பெருமை உடைத்து.
The dignity of modest womanhood excelsHis manliness, obedient to a woman's law who dwells
மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.
மனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது.
ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும்
Even shame faced womanhood is more to be esteemed than the shameless manhood that performs
| குறள் எண்: | 907 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | பெண்வழிச் சேறல் |
| இயல்: | நட்பியல் |