குறள்: 441அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறனறிந்து தேர்ந்து கொளல்.
As friends the men who virtue know, and riper wisdom share,Their worth weighed well, the king should choose with care
அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.
அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக.
அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்
Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledge
| குறள் எண்: | 441 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | பெரியாரைத் துணைக்கோடல் |
| இயல்: | அரசியல் |