குறள்: 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.

The king, since counsellors are monarch's eyes,Should counsellors select with counsel wise

மு.வரதராசன் உரை

தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க.

கலைஞர் உரை

கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்

Explanation

As a king must use his ministers as eyes (in managing his kingdom), let him well examine their character and qualifications before he engages them

Kural Info

குறள் எண்:445
Category:பொருட்பால்
அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல்
இயல்:அரசியல்