குறள்: 446தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.
The king, who knows to live with worthy men allied,Has nought to fear from any foeman's pride
தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.
தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.
அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது
There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men
| குறள் எண்: | 446 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | பெரியாரைத் துணைக்கோடல் |
| இயல்: | அரசியல் |