குறள்: 450பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.

Than hate of many foes incurred, works greater woeTen-fold, of worthy men the friendship to forego

மு.வரதராசன் உரை

நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை

துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும்.

கலைஞர் உரை

நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்

Explanation

It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many

Kural Info

குறள் எண்:450
Category:பொருட்பால்
அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல்
இயல்:அரசியல்