குறள்: 844வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மைஉடையம்யாம் என்னும் செருக்கு.

What is stupidity? The arrogance that cries,'Behold, we claim the glory of the wise.'

மு.வரதராசன் உரை

புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.

சாலமன் பாப்பையா உரை

அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும்.

கலைஞர் உரை

ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்

Explanation

What is called want of wisdom is the vanity which says, "We are wise"

Kural Info

குறள் எண்:844
Category:பொருட்பால்
அதிகாரம்:புல்லறிவாண்மை
இயல்:நட்பியல்