குறள்: 543அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னவன் கோல்.
Learning and virtue of the sages spring,From all-controlling sceptre of the king
அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.
ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்
The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described
| குறள் எண்: | 543 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | செங்கோன்மை |
| இயல்: | அரசியல் |