குறள்: 546வேலன்று வென்றி தருவது மன்னவன்கோலதூஉங் கோடா தெனின்.

Not lance gives kings the victory,But sceptre swayed with equity

மு.வரதராசன் உரை

ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.

சாலமன் பாப்பையா உரை

ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.

கலைஞர் உரை

ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்

Explanation

It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice

Kural Info

குறள் எண்:546
Category:பொருட்பால்
அதிகாரம்:செங்கோன்மை
இயல்:அரசியல்