குறள்: 547இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனைமுறைகாக்கும் முட்டாச் செயின்.

The king all the whole realm of earth protects;And justice guards the king who right respects

மு.வரதராசன் உரை

உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.

சாலமன் பாப்பையா உரை

ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.

கலைஞர் உரை

நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்

Explanation

The king defends the whole world; and justice, when administered without defect, defends the king

Kural Info

குறள் எண்:547
Category:பொருட்பால்
அதிகாரம்:செங்கோன்மை
இயல்:அரசியல்