குறள்: 456மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்குஇல்லைநன் றாகா வினை.
From true pure-minded men a virtuous race proceeds;To men of pure companionship belong no evil deeds
மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.
மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.
மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்
To the pure-minded there will be a good posterity By those whose associates are pure, no deeds will be done that are not good
| குறள் எண்: | 456 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | சிற்றினம் சேராமை |
| இயல்: | அரசியல் |