குறள்: 459மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்இனநலத்தின் ஏமாப் புடைத்து.

Although to mental goodness joys of other life belong,Yet good companionship is confirmation strong

மு.வரதராசன் உரை

மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.

கலைஞர் உரை

நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்

Explanation

Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the good

Kural Info

குறள் எண்:459
Category:பொருட்பால்
அதிகாரம்:சிற்றினம் சேராமை
இயல்:அரசியல்