குறள்: 650இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றதுஉணர விரித்துரையா தார்.

Like scentless flower in blooming garland boundAre men who can't their lore acquired to other's ears expound

மு.வரதராசன் உரை

தாம் கற்ற நூற்ப் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

சாலமன் பாப்பையா உரை

தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.

கலைஞர் உரை

கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்

Explanation

Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance

Kural Info

குறள் எண்:650
Category:பொருட்பால்
அதிகாரம்:சொல்வன்மை
இயல்:அமைச்சியல்