குறள்: 934சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்வறுமை தருவதொன்று இல்.
Gaming brings many woes, and ruins fair renown;Nothing to want brings men so surely down
ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.
துன்பங்கள் பல தந்த,நம் புகழையும் அழிக்கும் சூதைப் போல் நமக்கு வறுமை தருவது வேறு ஒன்றும் இல்லை.
பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைப் கெடுத்த, வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை
There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one's) reputation
| குறள் எண்: | 934 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | சூது |
| இயல்: | நட்பியல் |