குறள்: 936அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்முகடியான் மூடப்பட் டார்.
Gambling's Misfortune's other name: o'er whom she casts her veil,They suffer grievous want, and sorrows sore bewail
சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்.
சூதாட்டம் என்னும் மூதேவியால் மூடப்பட்டவர் வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர்.
சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறார உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள்
Those who are swallowed by the goddess called "gambling" will never have their hunger satisfied, but suffer the pangs of hell in the next world
| குறள் எண்: | 936 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | சூது |
| இயல்: | நட்பியல் |