குறள்: 939உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்அடையாவாம் ஆயங் கொளின்.
Clothes, wealth, food, praise, and learning, all departFrom him on gambler's gain who sets his heart
சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.
சூதாட்டத்தை விரும்பினால் மரியாதை, கல்வி, செல்வம், உணவு, உடை என்ற ஐந்தும் சேரமாட்டா.
சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டவர்களை விட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி விடும்
The habit of gambling prevents the attainment of these five: clothing, wealth, food, fame and learning
| குறள் எண்: | 939 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | சூது |
| இயல்: | நட்பியல் |