குறள்: 820எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇமன்றில் பழிப்பார் தொடர்பு.

In anywise maintain not intercourse with those,Who in the house are friends, in hall are slandering foes

மு.வரதராசன் உரை

தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

நம் வீட்டுக்குள் வந்து நட்புக் கொண்டாடிப் பலர் இருக்கும் சபையில் நம்மைப் பழிப்பவரின் தொடர்பைச் சிறிதளவும் சேரவிட வேண்டா.

கலைஞர் உரை

தனியாகச் சிந்திக்கும் போத இனிமையாகப் பழகிவிட்டுப் பொது மன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பு தம்மை அணுகாமல் விலக்கிக் கொள்ளப்படவேண்டும்

Explanation

Avoid even the least approach to a contraction of friendship with those who would love you in private but ridicule you in public

Kural Info

குறள் எண்:820
Category:பொருட்பால்
அதிகாரம்:தீ நட்பு
இயல்:நட்பியல்