குறள்: 508தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறைதீரா இடும்பை தரும்.

Who trusts an untried stranger, brings disgrace,Remediless, on all his race

மு.வரதராசன் உரை

மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை

நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.

கலைஞர் உரை

ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்

Explanation

Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known

Kural Info

குறள் எண்:508
Category:பொருட்பால்
அதிகாரம்:தெரிந்து தெளிதல்
இயல்:அரசியல்