குறள்: 514எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர்.
Even when tests of every kind are multiplied,Full many a man proves otherwise, by action tried
எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.
எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் திறத்தால், எதிர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர்.
எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்
Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed)
| குறள் எண்: | 514 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | தெரிந்து வினையாடல் |
| இயல்: | அரசியல் |