குறள்: 890உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்பாம்போடு உடனுறைந் தற்று.

Domestic life with those who don't agree,Is dwelling in a shed with snake for company

மு.வரதராசன் உரை

அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

மனப்பொருத்தம் இல்லா‌தவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும்.

கலைஞர் உரை

உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்

Explanation

Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut

Kural Info

குறள் எண்:890
Category:பொருட்பால்
அதிகாரம்:உட்பகை
இயல்:நட்பியல்