குறள்: 475பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்சால மிகுத்துப் பெயின்.

With peacock feathers light, you load the wain;Yet, heaped too high, the axle snaps in twain

மு.வரதராசன் உரை

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.

சாலமன் பாப்பையா உரை

மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.

கலைஞர் உரை

மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்

Explanation

The axle tree of a bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloaded

Kural Info

குறள் எண்:475
Category:பொருட்பால்
அதிகாரம்:வலியறிதல்
இயல்:அரசியல்