குறள்: 480உளவரை தூக்காத ஒப்புர வாண்மைவளவரை வல்லைக் கெடும்.
Beneficence that measures not its bound of means,Will swiftly bring to nought the wealth on which it leans
தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.
பொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும்.
தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்
The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property
| குறள் எண்: | 480 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | வலியறிதல் |
| இயல்: | அரசியல் |