குறள்: 679நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததேஒட்டாரை ஒட்டிக் கொளல்.

Than kindly acts to friends more urgent thing to do, Is making foes to cling as friends attached to you

மு.வரதராசன் உரை

பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றை செய்தலைவிட விரைந்து செய்யத்தக்கதாகும்.

சாலமன் பாப்பையா உரை

ஒரு செயலைச் செய்யும்போது நண்பர்களுக்கு நல்லது செய்வதைக் காட்டிலும் தன் பகைவர்களோடு நட்புக் கொள்வது விரைந்து செய்யப்படவேண்டியது.

கலைஞர் உரை

நன்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும்

Explanation

One should rather hasten to secure the alliance of the foes (of one's foes) than perform good offices to one's friends

Kural Info

குறள் எண்:679
Category:பொருட்பால்
அதிகாரம்:வினை செயல்வகை
இயல்:அமைச்சியல்