குறள்: 666எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின்.
Whate'er men think, ev'n as they think, may men obtain,If those who think can steadfastness of will retain
எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.
ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார்.
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்
If those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain what they have desired even as they have desired it
| குறள் எண்: | 666 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | வினைத்திட்பம் |
| இயல்: | அமைச்சியல் |