குறள்: 669துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றிஇன்பம் பயக்கும் வினை.

Though toil and trouble face thee, firm resolve hold fast,And do the deeds that pleasure yield at last

மு.வரதராசன் உரை

(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.

கலைஞர் உரை

இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்

Explanation

Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end)

Kural Info

குறள் எண்:669
Category:பொருட்பால்
அதிகாரம்:வினைத்திட்பம்
இயல்:அமைச்சியல்