குறள்: 670எனைத்திட்பம் எய் தியக் கண்ணும் வினைத்திட்பம்வேண்டாரை வேண்டாது உலகு.

The world desires not men of every power possessed,Who power in act desire not,- crown of all the rest

மு.வரதராசன் உரை

வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.

சாலமன் பாப்பையா உரை

எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்.

கலைஞர் உரை

எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது

Explanation

The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess

Kural Info

குறள் எண்:670
Category:பொருட்பால்
அதிகாரம்:வினைத்திட்பம்
இயல்:அமைச்சியல்