மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 481பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
குறள்: 482பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்தீராமை ஆர்க்குங் கயிறு.
குறள்: 483அருவினை யென்ப உளவோ கருவியான்காலம் அறந்து செயின்.
குறள்: 484ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்கருதி இடத்தாற் செயின்.
குறள்: 485காலம் கருதி இருப்பர் கலங்காதுஞாலம் கருது பவர்.
குறள்: 486ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்தாக்கற்குப் பேருந் தகைத்து.
குறள்: 487பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துஉள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
குறள்: 488செறுநரைக் காணின் சுமக்க இறுவரைகாணின் கிழக்காம் தலை.
குறள்: 489எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையேசெய்தற் கரிய செயல்.
குறள்: 490கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த இடத்து.