அவா அறுத்தல்

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 361அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்தவாஅப் பிறப்பீனும் வித்து.

குறள்: 362வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றதுவேண்டாமை வேண்ட வரும்.

குறள்: 363வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லைஆண்டும் அஃதொப்பது இல்.

குறள்: 364தூஉய்மை என்பது அவாவின்மை மற்றதுவாஅய்மை வேண்ட வரும்.

குறள்: 365அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்அற்றாக அற்றது இலர்.

குறள்: 366அஞ்சுவ தோரும் அறனே ஒருவனைவஞ்சிப்ப தோரும் அவா.

குறள்: 367அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினைதான்வேண்டு மாற்றான் வரும்.

குறள்: 368அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்தவாஅது மேன்மேல் வரும்.

குறள்: 369இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்துன்பத்துள் துன்பங் கெடின்.

குறள்: 370ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையேபேரா இயற்கை தரும்.