மருந்து

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 941மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்வளிமுதலா எண்ணிய மூன்று.

குறள்: 942மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியதுஅற்றது போற்றி உணின்.

குறள்: 943அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்புபெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

குறள்: 944அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்லதுய்க்க துவரப் பசித்து.

குறள்: 945மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

குறள்: 946இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்கழிபேர் இரையான்கண் நோய்.

குறள்: 947தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்நோயள வின்றிப் படும்.

குறள்: 948நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல்.

குறள்: 949உற்றான் அளவும் பிணியளவும் காலமும்கற்றான் கருதிச் செயல்.

குறள்: 950உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்றுஅப்பால் நாற் கூற்றே மருந்து.